வாகனக்கடன் (car / vehicle loan) மூலம் ஒரு மகிழ்வுந்து (car) வாங்குவதற்கு யோசிக்கின்றீர்களா? அந்த சிந்தனையை சற்றே நிறுத்துங்கள். ஒரு புத்தம் புதிய மகிழ்வுந்து வாங்கி சாலையில் இறங்கும் அந்த நொடியில் தனது மதிப்பில் 20 சதவீதத்தை இழக்கிறது. மேலும் ஆண்டுதோறும் தேய்மானம் காரணமாக 15 சதவீதத்தை இழக்கிறது. இது அரசு பரிந்துரைக்கும் தேய்மான அளவு.
இதன்மூலம் நாம் தெரிந்துகொள்வது, வாகனம் வாங்கிய முதல் சில ஆண்டுகள், குறிப்பாக நீங்கள் கடனை அடைக்கும் முன், உங்கள் மகிழ்வுந்தின் மதிப்பு உங்கள் கடன் தொகையை விட குறைவாகவே இருக்கும்.
ஒருவேளை, நீங்கள் வாகனக்கடன் வாங்காமல், அந்த கடனுக்கான மாதவாரித் தவணையை (EMI) நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்தால், 2 முதல் 4 ஆண்டுகளில் ஒரு பழைய மகிழ்வுந்தை கடனின்றி வாங்க உங்களுக்கு அது வழிசெய்யக்கூடும். மேலும், இதன்மூலம் புதிய மகிழ்வுந்துகளில் ஏற்படும் ஆரம்பநிலை கடும் மதிப்பு வீழ்ச்சியிலிருந்தும் உங்களை காக்கும் வாய்ப்பும் உள்ளது.
இந்தக் கணிப்பேட்டை(calculator) உபயோகித்து மேலும் இது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
வாகனக்கடன் வாங்கும்முன் சிந்திக்க உதவும் கணிப்பேட்டை பதிவிறக்கவும்.
This page is the Tamil translation of Think Before Taking a Car Loan!
ஆசிரியர்: freefincal
மொழிபெயர்ப்பாளர்: Venkatesh Jambulingam