வீட்டுக் கடனை அடைத்து முடிப்பதா? அல்லது ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்வதா?

கடந்த வாரம் மேற்கூறிய தலைப்பை பற்றி ஒரு வலைபதிவும் மற்றும் அதனோடு ஒரு கணிப்பேட்டையும் பதிவேற்றம் செய்திருந்தேன். அந்த பதிவு, உங்கள் வீட்டுக் கடனை அடைத்து முடித்தபின் ஓய்வு காலத்திற்கான முதலீட்டை அதிகப்படுத்துவதா? அல்லது வீட்டுக்கடனின் மாதவாரித் தவணையை மட்டும் செலுத்தி மீதமுள்ள பணத்தை ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்வதா? என்பது குறித்து விவாதித்தது. இந்த பதிவின் மூலம் திருத்தப்பட்ட கணிப்பேட்டை பதிவேற்றம் செய்கிறேன். திரு. P.V.சுப்ரமணியம் (www.subramoney.com) அவர்கள் சுவாரசியம் மிகுந்த ஒரு சாத்தியக்கூறு  பற்றிக் …