பொருளீட்டும் இளம் பருவத்தினர் எளிய தொகுமுதலீடு கட்டமைக்கும் யோசைனைகள்

நெடுங்கால இலக்குகளுக்கு செய்யப்படும் முதலீடுகள் கீழ்க்காணும் கொள்கைகளை கொண்டு நிர்வகிக்கப்படுகிறது.

 1. அதிக முதலீடு மற்றும்/அல்லது மிகு மாற்ற முதலீட்டு சாதனத்தில் போதுமான ஒதுக்கீடு மூலம் பணவீக்கத்தை வீழ்த்துதல்.
 2. மிகு மாற்றத்தை (volatility) கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்தல். மிகுமாற்ற சாதனங்களில் (volatile instruments) தீவிரமாக முதலீடு செய்து அதிக இலாபம் ஈட்ட முயல்வது ஒரு மாராத்தான் ஓட்டத்தை உசைன் போல்ட் போல் வேகமாக ஓடுவதற்கு சமம்.
 3. மிகு மாற்ற சாதனங்களின் மிகுமாற்றத் தன்மையை கட்டுப்படுத்தும் நுணுக்கத்தை அறிதல்.
  1. கடன்சார் நிதிப்பொருட்களை எப்பொழுதும் மறக்காதீர். எந்த ஒரு நெடுங்கால இலக்கிற்கும் பங்குசார் முதலீடுகளில் 50% முதல் 60% மேலாக ஒதுக்கீடு தேவைப்படாது.
  2. தொகுமுதலீட்டில் (portfolio) உள்ள சொத்து வகைகளையும் (asset class) மற்றும் ஒவ்வொரு வகையின் கீழ் உள்ள சொத்துக்களையும் செவ்விரிவாக்கம் (diversification) செய்யும் பக்குவம் வேண்டும்.
  3. அவ்வப்போது அதிக இலாபம் தரும் சொத்து வகையிலிருந்து கிடைக்கும் இலாபத்தை சற்றே குறைந்த இலாபம் தரும் சொத்து வகைக்கு மற்றும் பக்குவமும் வேண்டும். இதை தொகுமுதலீடு மறு சமநிலைப்படுத்துதல் (portfolio rebalancing) என்பர்.

 

முதலீட்டாளர்கள், குறிப்பாக இளம் பருவத்தினர், தங்கள் தொகுமுதலீட்டை முடிந்தவரையில் எளிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பெரும்பாலான மக்களுக்கு, உங்கள் தொகுமுதலீட்டில் உள்ள ஒரு சொத்து வகையை செவ்விரிவாக்கம் செய்ய சிறந்த வழி, அதனை செய்ய முயற்சிக்காமல் இருப்பதே. நீங்கள் செய்வதறியாது இதனை செய்தால், அந்த காரியம் இதுபோல தோன்றும்:

கீழ்காணும் சில தொகுமுதலீடு யோசனைகள் எளிய முறையில் கட்டமைக்கப்பட்டவை. இவை உங்கள் நெடுங்கால இலக்குகளுக்காக (15 வருடங்கள் மற்றும் அதற்கு மேல்).

இந்த யோசனைகள் கீழ்காணும் தருணங்களில் உதவாது என்ற எச்சரிக்கையோடு தொடருங்கள்:

 • பங்குசார் முதலீடுகளில் 12% CAGR மேலான இலாபத்தை எதிர்பார்த்தல்.
 • நீங்கள் முதலீடு செய்த பரஸ்பர நிதி திட்டத்தை தவிர மற்ற திட்டங்கள் அதிக இலாபம் தரும்போது நீங்கள் மன நிம்மதி இழத்தல்
 • உங்கள் இலக்கு பல வருடங்களுக்கு பின்னர் இருப்பதனால், நடுமுதல் (Mid-Cap) மற்றும் சிறு முதல் (Small-Cap) பரஸ்பர நிதி திட்டத்தின் மூலம் அதிக இலாபம் பெற நினைத்தல்.

எளிய தொகுமுதலீடு #1:

ஒரு பெருமுதல் பரஸ்பர நிதித்திட்டம் (Large Cap Mutual Fund)  60% + பொது வைப்புநிதி திட்டம் (PPF) 40%

உங்கள் முதலீட்டு கொள்கைகளின் கருப்பொருள் மற்றும் துணைப்பொருள் பற்றிக் கவலை வேண்டாம். சிறந்த பெருமுதல் பரஸ்பர நிதித்திட்டங்கள் சிறிய  மிகுமாற்றத்திற்கு மட்டுமே உள்ளாகும். பெருமுதல் பங்குகள் அதிக நீர்மைத்தன்மை கொண்டமையால், பெருமுதல் நிதிதிட்டத்தின் மொத்த நிதியளவு ஒரு பொருட்டல்ல.

எளிய தொகுமுதலீடு #2:

ஒரு பங்குசார் சமநிலை பரஸ்பர நிதித்திட்டம் (Single Equity-oriented balanced mutual fund)

பின்வரும் காரணங்களுக்காக மேற்கூறிய திட்டம் எனக்கு பிடித்தமானது

 1. வரியில்லா கடன் ஒதுக்கீடு
 2. தானியங்கி மறு சமநிலைப்படுத்துதல்
 3. திட்ட வருவாய் = தொகுமுதலீட்டின் வருவாய். இலக்கு கண்காணிப்பு எளிதானது.
 4. பரஸ்பர நிதித்திட்டங்களில் இவ்வகை திட்டம் அதிக நீர்மைத்தன்மை கொண்டவை
 5. இவற்றில் உள்ள பங்குகளும் செவ்விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளன.

எளிய தொகுமுதலீடு #3(அ):

ஒரு பெருமுதல் மற்றும் நடுமுதல் பரஸ்பர நிதித்திட்டம் (60%) + பொது வைப்புநிதி திட்டம் (40% மட்டுமே)

இது நடுமுதல் திட்டம் குறித்து ஏங்கும் ஆன்மாக்களுக்காக. இவற்றில் சிறுமுதல் திட்டங்களையும் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

நிதித்திட்டதின் அளவு ஒரு பிரச்சினை. திட்டத்தின் அளவு பெரிதாகும் பொழுது, இயற்கையாகவே இவை பெருமுதல் திட்டங்களாக மாறும்.

எளிய தொகுமுதலீடு #3(ஆ):

ஒரு பெருமுதல் பரஸ்பர நிதித்திட்டம் (60%) + பொது வைப்புநிதி திட்டம் (40% மட்டுமே)

அல்லது

ஒரு பெருமுதல் மற்றும் நடுமுதல் பரஸ்பர நிதித்திட்டம் (60%) + பொது வைப்புநிதி திட்டம் (40% மட்டுமே)

மேற்கூறிய நிதித்திட்டம் வெளிநாட்டு பங்குசந்தை பங்குகளில் முதலீடு செய்யும் வசதி கொண்டவை.

முறையான செவ்விரிவாக்கம் சிறந்த நீண்டகால வருவாய் பெரும் தன்மைகொண்டது. ஆனால் குறுகிய காலாத்தில் வருவாயில் பின்தங்கிய தோற்றத்தைக் கொடுக்கும். (செவ்விரிவாக்கம் பயனளிக்க நேர முதிர்வு தேவை)

~~~~~~~~~

பின்வரும் காலங்களில் ஒரு கடன்சார் பரஸ்பர நிதி திட்டத்தை மேற்கூறிய தொகுமுதலீட்டில் சேர்த்து மறு சமநிலைப்படுத்தலாம். முதலில், ஒரு வழி சமநிலை படுத்துதல் அவசியம். அதாவது பங்கு ஒதுக்கீடுகளை (5% மற்றும் மேலான) பொது வைப்பு நிதிக்கு மாற்றலாம்.

உங்கள் அனைத்து நீண்டகால இலக்குகளுக்கும் நீங்கள் ஒரே நேரத்தில் முதலீடு செய்ய தொடங்கினால், ஒருங்கிணைந்த எளிய தொகுமுதலீடு போதுமானது.

உங்கள் இலக்குகளுக்கான முதலீடுகளை தொடங்க சில வருட இடைவெளி இருக்கும்பட்சத்தில், நீங்கள் தனித்தனி எளிய  தொகுமுதலீடுகளை தொடங்கலாம். இவை இலக்குகளை எளிதில் கண்காணிக்கவும் மற்றும் தொகுமுதலீட்டை எளிதில் மறு சமநிலைப்படுத்தவும் உதவும். நீங்கள் ஒருங்கிணைந்த தொகுமுதலீடு வழியாகவும் இதனை செயல்படுத்தலாம். ஆனால், உங்கள் இலக்குகளுக்கான பொருள் தேவையை தனித்தனியே கண்காணிப்பது கடினம்.

தனிப்பட்ட எளிய தொகுமுதலீடு சார்பற்ற மறையிடர் மேலாண்மையை  அனுமதிக்கின்றன. ஒரு 25 ஆண்டு இலக்கும், 15 ஆண்டு இலக்கும் சமமானதல்ல. 15 ஆண்டு கால இலக்கிற்கு அடிக்கடி நான் மறு சமநிலைப்படுத்த விரும்புகிறேன்.

அவ்வளவே. நடுமுதல் / சிறுமுதல் / குறுமுதல் திட்டங்களின் மோகத்தை துரத்தவேண்டாம்.

எளிமையாக வைத்திருங்கள்.

கொள்ளைநோய் போன்று, தொகுமுதலீட்டின் ஒழுங்கீனம் தவிர்க்கவும்.

ஒரு எளிய தொகுமுதலீட்டை கருத்தில்கொள்க…!!!

This post is the Tamil translation of Minimalist portfolio ideas for young earners.

ஆசிரியர்: திரு. பட்டாபிராமன்

மொழிபெயர்ப்பாளர்: திரு. வெங்கடேஷ்

Join the Conversation

1 Comment

Leave a comment

Leave a Reply

%d bloggers like this: