எனக்கு எவ்வளவு காப்பீடு தேவை?
இந்த விரிவான காப்பீடு தொகை கணிப்பேட்டை பயன்படுத்தி உங்கள் காப்பீட்டு தேவைகளை கணக்கிடுங்கள்.
உங்கள் காப்பீட்டு தேவையை தீர்மாணிக்கும் முன், நம்மில் யார்வேண்டுமானாலும் எந்த நொடியிலும் இறந்துபோகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இளம்வயதில் இறந்த செய்திகேட்ட போது உங்கள் மனநிலையை சிந்தித்துப்பாருங்கள். அதே மனநிலையில் இந்த கணிப்பேட்டை பயன்படுத்துங்கள்.
உங்கள் காப்பீட்டு தேவையை கணக்கிடுவது மிகவும் சுலபம். நீங்கள் எதிர்பாராத விதமாக இறக்க நேர்ந்தால்,
- உங்கள் பெயரிலுள்ள அனைத்து நிலுவைக் கடன் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும்.
- உங்கள் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கும் மேலும் அவர்களின் திருமண செலவிற்கு நிதி ஒதுக்க வேண்டும்.
- உங்கள் குடும்பம் தொடர்ந்து வாழ தேவைப்படும் மாதச் செலவு மற்றும் வருடச் செலவுக்கு நிதி ஏற்பாடு செய்யவேண்டும்.
மேற்கூறிய விடயங்களை செய்திட இந்த கணிப்பேடு பல தெரிவுகளை உங்களுக்கு அளிக்கிறது. இது ஒரு விரிவான கணிப்பேடாகும். இதில் கையாளப்பட்டுள்ள அணுகுமுறை காப்பீடு தேவைகளை கணக்கிட உதவும் துல்லியமான அணுகுமுறையாகும். உங்கள் குடும்ப செலவை ஈடுகட்ட தேவைப்படும் காப்பீடு தொகையை கணக்கிட மூன்று தெரிவுகள் உள்ளன. இவற்றுள் உங்களுக்கு இலகுவாக இருக்கும் முறையை தேர்வு செய்யவும்.
மேற்கூறிய மூன்று இலக்குகளுக்கு எத்தனை சதவீதம் நிதி ஒதுக்கவேண்டும் என்று இந்த கணிப்பேடு உங்களுக்கு எடுத்துக்காட்டும். இந்த கணிப்பேட்டை நீங்கள் உபயோகிக்க தேர்வு செய்தாலும் செய்யாவிடினும், ஆயுள் காப்பீடு தொகையை செலவிடும் வழிகள் குறித்து உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது நியமினியிடம் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும்.
காப்பீடு தொகை கணிப்பேட்டை பதிவிறக்கவும்
This page is the Tamil translation of Need-Based Approach Insurance Calculator.
ஆசிரியர்: freefincal
மொழிபெயர்ப்பாளர்: Venkatesh Jambulingam